1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்.
1. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பதவியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தார். மாதம் ரூ. 20,000/- (ரூபாய் இருபதாயிரம்) சம்பளமாக பெற்றபோதிலும் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
2. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
3. தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.
4. பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம்.
5. ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.
6. ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
7. வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
8. கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
9. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.
10. பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
11. ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.
12. பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.
13. பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
14. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது
15. பால்வண்ண நாதன்
பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன் ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
16. தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்
1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.
17. திரு. இராமச்சந்திர ஆதித்தனார் &
திரு. சிவந்தி ஆதித்தனார்
நூலகம் ஒன்றினை அமைக்க திரு. இராமச்சந்திர ஆதித்தனார், திரு. சிவந்தி ஆதித்தனாரிடம் இடம் வேண்டியபோது அவர்கள் தங்கள் தந்தையார் திரு. சி.பா. ஆதித்தனார் வாழ்ந்த இல்லத்தையே நன்கொடையாக அளித்தனர்.
18. திரு. தமிழ்வாணன்
இளம் வயதில் பாலம் ஐயா தனது மெல்லிய குரலால் தனது வாழ்க்கையே பயனற்றதாகி விட்டதாக கருதியபோது கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் உன் வாழ்க்கை என்பது நீ எப்படிப் பேசுகிறாய் என்பதில் இல்லை, உன்னைப்பற்றி ஊர் என்ன பேசுகிறதோ அதுதான் உனது வாழ்க்கை. உலகமே புகழுமாறு உன்னால் வாழ்ந்து காட்ட முடியும் என்ற அவரது மணிவாசகமே அவரை தன்னம்பிக்கை மனிதனாக ஆக்கியது.
19.திரு. பாலசுப்பிரமணியம்
ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சந்திப்பு அவரது வாழ்க்கையில் மிகுந்த மாறுதலை ஏற்படுத்தியது. சேவை வாழ்க்கை என்றால் என்ன என்பதனை அவர் கீதோபதேசம்போல் சொன்னதுடன் அதன்படி உன்னால் நடக்க முடியுமா என தேர்வு வைத்தபோது அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சுமார் 30 ஆண்டுகளாக அவர் செய்த உதவிகள் அவருக்கும் அவரால் பயன்பட்டோருக்கும் மட்டுமே தெரியும். தேர்ந்த சிற்பிபோல் சேவை வாழ்க்கையில் அவரை முழுமனிதனாக ஆக்கினார். அதன் விளைவுதான் பத்தாயிரத்தின் சிறந்த மனிதர் என்ற உலகளாவிய விருது பெற காரணமாகும்.
20.பாலத்தை உலகறிய செய்தவர்
பாலம் ஐயா தனது ஓய்வூதியமான ரூபாய் பத்து லட்சத்தை இராகவேந்திரா மண்டபத்தில் பாரதரத்னா சி. சுப்பிரமணியம் தலைமையில் மக்களுக்கு அளித்து விட்டு நல்லியாரை சந்நித்து தான் இனி கிராம மக்களுக்கு சேவை செய்யப் போவதாகச் சொன்னார். அதற்கு நல்லியார் தலைநகரம் சென்னையில் ஒரு அலுவலகம் அமைத்து செயல்பட்டால் ஏராளமான பேருக்கு உதவி செய்யும் வாய்ப்பு உள்ளது என்றார். அதற்கு ஐயா என்னிடம் காசு ஏதும் இல்லை, அலுவலகத்தின் அடிப்படை வசதிகளுக்கு எத்தனை பேரை நான் அணுக முடியும் என்றார். நல்லியார் புன்முறுவலுடன் அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படியே வழிகாட்டியும் வருகிறார். பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களது ஆதரவினாலேயே அன்பு பாலம் உலகறிந்த ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது.
21. தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா (02.10.2012)
திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கப் செய்தல் வேண்டும் என்றார் பாரதியார். பாலம் ஐயாவை கிளிண்டன், நெல்சன் மண்டேலா போன்ற வெளிநாட்டவரும் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாரட்டியுள்ளார்கள். அது தான் நமக்குப் பெருமை.
22. Bharath Rathna M.S. Subbulakshmi (18.02.2000)
Prof. P. Kalyanasundaram is a rare soul who, in pooja Rajaji words. Practices Gandhian Principles without bothering whether the world took notice of it or not. He is tender like a flower but strong like a rock highly principled in life from his childhood.
23. Bharath Rathna C. Subramaniam (19.02.2000)
Shri. P. Kalyanasundaram is a unique Personality. He is a finest example of simple living & high thinking. On all accounts he represents the best of humanity.
24. பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (06.07.2001 – முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர்)
தன்னலம் இல்லாமல் வாழ்வதே சிறப்பான பெரு வாழ்வாகும். இறைவன் பா. கலியாணசுந்தரத்திற்கு அந்த அரும் பெரும் வாழ்வைக் கொடுத்து இருக்கிறார். அதனால் பலர் அவர் நிழலில் நல்ல நிலையில் சிறப்படைகிறார்கள்.
25. பாரத ரத்னா காமராஜர் (01.05.1963 – முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்)
நமது பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவிலேயே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளிக்க முதல் மாணவன் என்ற வகையிலும் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய முதல் பிரஜை என்ற வகையிலும் மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த மனிதராக வருவார்.
26. பாரத ரத்னா எம்.ஜி.ஆர் (14.01.1977)
ஆதரவற்ற குழந்தைகள் நல்வாழ்வு பெற வாழ்க பல்லாண்டு.
27. Pandit Jawaharlal Nehru (10.06.1963 – Former Prime Minister of india)
When Mr. Kamaraj introduced Mr. Kalyana Sundaram to Nehruji, he praised Mr. Kalyanasundaram as the ‘Light of India’.
28. Dr. Manmohan singh(30.01.1996 – Prime Minister of India)
Mr. Kalyanasundaram is a role model to the entire student community who want to achieve some milestone to their career.
29. Bill Clinton (23.03.2000 – Former president of USA)
Mr. Kalyanasundaram has introduced a new method for strengthening the good relationship between the countries of the world. This can be christained as Kalyanasundaram plan.
30. Nelson Mandala (10.05.1994 – Former Prime Minister of South Africa)
The Progress of a country depends upon the children and the students of that country. Indeed it is very great Mr. Kalyanasundaram has been doing yeoman services to this section of society for past 50 years and without any publicity.
31. Kiran Bedi (15.01.1996 Former advisor to U.N Security Council – Former IG of Tihar Jail )
If Mr.P. Kalyanasundaram is invided as a Chief Guest to make a visit to the Tihar jail. His Very Presence reform the prisoners.
32. திரு. சுர்ஜித்சிங் பர்னாலா(04. 07.2005 – முன்னாள் தமிழக ஆளுநர்)
இந்தியாவின் மேன்மையான மனிதர்களுள் ஒருவராகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
33. நீதியரசர் நடராஜன் (02-10-2012 – உச்ச நீதிமன்ற நீதிபதி – ஓய்வு)
நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ, மாணவிகளையும் ஒருங்கிணைத்து அவர் செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
34. நீதியரசர் மோகன் (02-10-2003 – உச்ச நீதிமன்ற நீதிபதி – ஓய்வு)
பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த 21 – ஆம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.
35.டாக்டர் வசந்தி தேவி (02.10.1997 முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
கல்யாண சுந்தரனாருக்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச விருது கிடைத்ததற்காக பெரு மகிழ்ச்சியடைகிறேன். இவ்விருதினை பெறுவதற்கு அவர் முழு தகுதியும் பெற்றவர். அவரது நீண்டகால அற்புதமான கல்விப் பணிக்கும் வியக்கத்தகு தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கும் கிடைத்த விருது இது. கொடிய பேராசைகளும், கேவலங்களும், ஆக்கிரமித்து இருக்கும் இன்றைய உலகில் அவரைப் போன்ற எளிமையும் சமுதாய ஈடுபாடும் தியாக உள்ளமும் கொண்டவரைக் காண்பது மிகவும் அரிது.
36. டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (ஆனந்த விகடன்)
காந்திஜி இன்னும் நம்முடன்தான் வாழ்கிறார் என்பதற்கு உதாரணம், திரு. பா. கலியாணசுந்தரனார்.
37. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கலியாண சுந்தரனார் நம்மோடு வாழும் ஓர் மகான் ஆவார்.
38. General S. Padmanaban (PVSM : AVSM VSM (Retd))
Mr. P. Kalyana Sundaram, the Founder of ‘paalam’ has created this unique humanitarian Organisation and has devoted himself, body and soul, for its success in the process of doing so, he has set for all Humanity such as an example of Selflessness, Vision and excuitive ability as has saldom been equaled in the history of man. ( உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாக இருந்தவர்).
39. பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
தனது ஊதியம் முழுவதையும் அளித்தது, கொடுப்பதற்காகவே திருமண வாழ்க்கை தியாகம் செய்தது. பரிபூரண எளிய வாழ்க்கை இவைகளை ஒப்பிடும்போது கடையேழு வள்ளல்களும், கர்ணனும் இவருக்கு ஈடாக முடியாது.
40. சென்னை பெருநகர தந்தை திரு. சைதை துரைசாமி அவர்கள் ஐயத்திற்கு இடமில்லாத நேர்மை, அப்பழுக்கற்ற நாணயம், இடைவிடாத மக்கள் நலனில் அக்கறையுடன் கூடிய உழைப்பு இவையே பாலம் ஐயாவுக்கு எல்லா தரப்பில் உதவிகளை பெற்றுத் தருகிறது.
41.ஆனந்த விகடன்(16.11.1997)
இந்தியாவின் குழந்தைகளுக்காக சிறந்த நூலகம், உலக குழந்தைகள் பல்கலைக்கழகம் என்று பல உயரிய திட்டங்களை நிறைவேற்ற ஆசை கொண்டுள்ளார். சலிக்காத உழைப்பு, ஈடுபாடு, மனித நேயத்துடன் செயல்பட்டு வரும் இவர் திட்டங்களை மக்கள் உதவியுடன் நிறைவேற்றுவார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
42.கல்கி (12.09.1993)
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட 10000 குழந்தைகளுக்கு நிவாரணம் தேட ஒரு சூறாவளி முயற்சியை மேற்கொண்டார் கலியாணசுந்தரம்.
43. ராணி (25.08.1991)
உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயார் என்று சிலர் வாய்ப்பந்தல் போடுவார் ஆனால், உண்மையாகவே அப்படி தியாகம் செய்து கொண்டிருக்கும் மாமனிதர் பா. கலியாணசுந்தரம்.
44. கல்கண்டு (06.09.1990)
30 ஆண்டு காலமாக குழந்தைகள் நலத்திற்கு எல்லாவற்றையும் நன்கொடையாகக் கொடுக்கும் பா. கலியாணசுந்தரம் போன்ற நல்லாசிரியர் ஒருவரை வரலாற்றில் காணமுடியாது.
45. குமுதம் (11.06.1998)
ரஜினி குடும்பத்தினர் கலியான சுந்தரனாருக்கு நடத்திய பாரட்டு விழாவில் அவரை தந்தையாக தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
46.தினத்தந்தி (26.05.1995)
நல்ல காரியங்களுக்கு பொருளை வாரிவழங்குவது தான் நம் செல்வத்தை பாதுகாப்பதற்கு ஒரே வழி என்ற சான்றோர் வாக்கை கலியாணசுந்தரம் போல் எல்லாரும் கடைபிடித்து வாழ வேண்டும்-வாரியார்.
47.தினமலர் – வாரமலர் (07 .06. 1996)
வேலை, தொழில் ஆகியவற்றிற்காக குஜராத் சென்று அனைத்தையும் இழந்து அகதிகள் போல் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய தமிழர் குடும்பங்களுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் நிவாரண பணி செய்து அவர்களுக்கு புது வாழ்வு அளித்த பாலம் கலியாண சுந்தரத்தின் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
48. தினகரன் (05.07.1990)
ஒப்பிலா சேவைக்கு முப்பது கோடி பெற்ற போதும் அதை அப்படியே வழங்கியதன் மூலம் இந்தியாவின் பெருமையை உலகத்திற்கு வெளிப்படுத்தியவர்.
49.தினமணிக்கதிர் (28.05.1995)
நல்ல காரியங்களுக்காக அள்ளி வழங்கியவர்களை கலியுக கர்ணன் என்று பாரட்டுவது உண்டு. அவர்கள் கூட தங்களுக்கென்று ஒதுக்கி விட்டுத்தான் கொடுக்கிறார்கள். மெலிந்த உடல், வெள்ளைக் கதராடை, ரகசியம் பேசுவது போல் மென்மையான குரல் கலியாணசுந்தரத்தின் இந்த உருவத்திற்குள் தான் எத்தனை பெரிய உள்ளம்.
50. The Hindu (23.11.1999)
India is a land of sacrifices. My experiment is to revive these values not by preaching or propaganda – but by example P. Kalyanansundaram says.
51. Indian express(23.11.2002)
You can call him the bridge palam P. Kalyanasundaram has donated his pension, his property and more than Rs. 30 crore to help the needy, but makes ends to meet by doing odd jobs in hotels.
52. India Today (11.01.1999)
Kalyanasundaram today runs palam (bridge) the first ever donor receiver social services mission in india. It connects donar contributing money or blood, cloths or books with the needy.
53. Times of India
In this age of self – contredness P. Kalyanasundaram has with a big heart serves selflessly, since the aged 14, kalyana sundaram has spent his pocket money, salary, and retirement benefits for children is welfare. For his own needs, he serves in a small hotel.
54. Times (10.05.2003)
He has resisted marriage offers. If I were to suggest to my wife that she wear shop- soiled khadisaris or do menial labour like me, the marriage would not last a day, he jokes “ Besides Marriage would have come in the way of my service he says with a no regrets and a smile.
55.சன் தொலைக்காட்சி (28.10.1998)
மற்ற நிறுவனங்களுக்கும் பாலத்திற்கும் என்ன வேறுபாடு?
பதில்: பாலம் உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைக்கிறது. ஏழையாக இருந்தாலும், இல்லறத்தில் வாழ்ந்தாலும், சமுதாயத்திற்காக சேவை செய்ய வாய்ப்பளிக்கிறது. சமூக சேவை நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்கிறது.
56. ஜெயா டிவி (26.09.2003)
கலியாண சுந்தரனார் பேச்சு ஆசியாவிலேயே மிகச் சிறந்த டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கும் வாய்ப்பு நம் தமிழகத்தில்தான் உள்ளது.
57. பொதிகை (10.11.1998- சென்னை தொலைக்காட்சி)
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர் இதுவரை 30 லட்சத்திற்கும் மேல் ஊதியத்திலிருந்தே நன்கொடையாகக் கொடுத்ததை மாத ஊதிய வர்த்தகத்தினர் வரலாற்றில் காண முடியாது.
58.டெல்லி தூர்தர்ஷன்
சர்வதேச ஒளிபரப்பு (29.10.1999) கலியாண சுந்தரனார் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தோன்றக்கூடிய அதிசய மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு ஊரிலும் பாலம் கிளை இருந்தால் அரசாங்கத்திற்கே வேலை இல்லை.
59.பி.பி.சி (18.07.2003)
கேள்வி: 30 கோடி கொடுத்தது ஒரு பெருமையான விஷயம் அல்லவா? கலியாண சுந்தரனார் பதில்: அதற்கு மேலாகவும் கொடுக்க எத்தனையோ பேருக்கு மனம் இருக்கிறது. ஆனால் அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்ததா?
60. Star TV(23.11.1999)
Mr. Kalyanasundaram is a rare personality known for his marvelous sacrifice and service to the welfare of the deprived children that no one could ever do in the world.
© Copyright 2017 - Anbu Paalam Kalyanasundaram | all rights reserved.